info@sriharikrishnanagailmaligai.com    +91 452 4395924

No item in cart

Login Register

About Us

Sri Hari Krishna Nagai Maligai.

ABOUT US

அறிமுகம் 

  • வணக்கம், எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களே காரணம். மேலும்  'ஸ்ரீ ஹரி கிருஷ்ணா நகை மாளிகை' மதுரையில் நகைகளுக்கான முக்கியமான இடத்தினை பெற்றுக்கொண்டு இருக்கிறது, மேலும் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
  • எங்களது நிறுவனம் 2008 ஆம் வருடம் துவங்கியதில் இருந்து ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் மற்றவர்களிடமிருந்து  ''வித்தியாசப்படுத்தி காட்டுவதில்" முன்னுரிமை கொடுத்து, இன்று வரை அதை செயல் படுத்தி வருகிறோம்.
  • வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கு ஏற்ப புத்தம் புதிய டிசைன்களை நாங்களே வடிவமைத்து தயாரித்து கொடுக்கின்றோம்.
  • இதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தங்க தொழிற்சாலைகளில் இருந்து புதிய டிசைன்களை தேர்ந்தெடுத்து மதுரையில் கொடுக்கின்றோம்.
  • தென் தமிழகத்தில் முதல் முறையாக "ரூபி" (Ruby) மற்றும் "எமரால்டு" (Emerald) நகைகளை 12 வருடங்களுக்கு முன்பே எங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமோடு கொடுத்துள்ளோம்.
  • எங்களின் நோக்கம் சிறந்த வேலைப்பாடு உள்ள ஆபரணங்களை அளிப்பதே.
  • ஸ்ரீ ஹரி கிருஷ்ணாவில் நீங்கள் வாங்கும் தங்க நகைகள் அனைத்தும் இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • எங்கள் இனிமையான உபசரிப்பு, அன்பான சேவை,  வசதியான இடம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியே எண்கள் நோக்கம்.  
KNOW ABOUT GOLD
  • தங்கத்திற்கு பொன் என்றும் பெயர் மேலும் மஞ்சள் நிறத்தில் உள்ளதால் மங்கள நிகழ்ச்சிக்கு பயன் படுத்தப்படுகிறது.
  • இது துருபிடிக்காது கலர் மாறாது. அதனால தான் நாணயமாகவும் ஆபரணமாகவும் வடிவமைக்கின்றனர்.
  • தங்கம் கேரட் என்ற அலகால் கணக்கிடப்படுகிறது.
  • 24ct என்பது தூய 999.9 தங்கம் ஆகும், ஆனால் ஆபரணங்கள் செய்ய முடியாது.
  • இந்தியாவில் 22ct, 18ct & 14ct களில் நகைகள் செய்யப்படுகிறது இதில் அரசு முத்திரை இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும்.
  • 22ct என்பது 91.6% தங்கம் மற்றும் வெள்ளி மற்றும் செம்பு கலந்தது ஆகும்.
  • தற்போதைய கணக்கின் படி உலகில் 1,86,700/- டன் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.
  • உலகில் பாதி தங்கம் தென் அமெரிக்கா கிடைக்க்கிறது.
  • கனடா ஆஸ்திரேலிய மற்றும் கொரியாவிலும் கிடைக்கிறது.
  • ஒவொரு நாடும் ரிசெர்வ் வங்கியின் கைஇருப்பு தங்கத்தினை வைத்து ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.
  • தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடு சீனா.
  • இது வெப்பம் மற்றும் மின்சாரம் கடத்தும்.
  • தங்கம் ராஜ திரவியத்தில் மட்டுமே கறைய கூடியது.
  • உலகிலேய அதிக தங்கம் கைஇருப்பு இருக்கும் நாடு அமெரிக்கா (8,135 டன்) இந்தியா 10 வது இடத்தில் (567 டன்).
HANDLING JEWELS
நகைகளை கையாளுதல்
  • தங்க நகைகளை உபயோகித்த பின்பு -தூய வெள்ளை துணியால் துடைத்து வைத்தால் 'நீண்ட நாட்களுக்கு கட்டிங் ஷைனிங்  குறையாமல் இருக்கும்.
  • அணிந்த நகைகளை நாங்கள் கொடுக்கும் பிரத்யேக (Box) பெட்டிகளில் மட்டுமே வைக்கவும்.
  • வைர நகைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்க வேண்டாம்.
  • தங்க நகைகளை புதுப்பிப்பதற்கு எங்களது ஷோரூம்களிலேயே கொடுத்தால் 5 நாட்களில் (polish) மெருகு செய்து தருகிறோம். வெளி ஆட்களிடம் கொடுக்க வேண்டாம்.
  • தினமும் அணியும் தங்க செயின்கள், தோடு, மற்றும் வளையல்களை  மாதம் ஒரு முறையாவது மிதமான வெந்நீரில் வைத்து பின் பிரஸ் செய்து அணியலாம்.
  • முடிந்த வரை வாசனை திரவியங்கள் நகை மேல் படாமல் இருந்தால் நல்லது.
  • நகைகளில் பாதரசம் போன்ற வேதி பொருள் பட்டால் உடனே நீரில் போட்டு பின் தனியாக கவரில் போட்டு எங்களிடம் உடனே கொடுக்கவும்.